நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்ரேல் தோஹா மீதான தாக்குதலைத் தொடர்ந்து எண்ணெய் விலைகள் உயர்ந்தன

கோலாலம்பூர் -

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு கத்தார் தலைநகர் டோஹா இலக்காகியதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து எண்ணெய் விலைகள் உயர்ந்தன.

இன்று காலை நிலவரப்படி பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.56 சதவீதம் உயர்ந்து 66.39 அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.

மேலும் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.54 சதவீதம் அதிகரித்து 62.97 அமெரிக்க டாலர்களாகவும் (US$1 = RM4.21) உயர்ந்துள்ளது.

இஸ்ரேலிய நடவடிக்கை மத்திய கிழக்கில் பதட்டங்களை அதிகப்படுத்திய மற்றொரு படியாகும்.

ரைஸ்டாட் எனர்ஜியின் புவிசார் அரசியல் பகுப்பாய்வுத் தலைவர் ஜார்ஜ் லியோன் இதனை கூறினார்.

இந்த நெருக்கடி முழு வட்டாரத்திற்கும் பரவும் அபாயம் அதிகரித்து வருவது தெளிவாகத் தெரிகிறது. 

அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியும் வளைகுடா ஒத்துழைப்பு வாரியத்தின் முக்கிய உறுப்பினருமான கத்தாரின் பதிலைப் பொறுத்து இது அதிகம் இருக்கும்.

கத்தாரின் அடுத்த நடவடிக்கைகள் வட்டார இயக்கவியலின் பாதையை வடிவமைக்கும் என்று அவர் இன்று ஒரு ஆராய்ச்சிக் குறிப்பில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset