நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கத்தாரை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலை மலேசியா வன்மையாக கண்டிக்கிறது: பிரதமர்

புத்ராஜெயா:

கத்தாரை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலை  மலேசியா வன்மையாக கண்டிக்கிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

கத்தார் தலைநகர் டோஹாவில் நேற்று இரவு இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலை மலேசியா வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்த அநாகரீகமான ஆக்கிரமிப்புச் செயல், கத்தாரின் இறையாண்மையை அப்பட்டமாக மீறுவதாகவும், சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறலாகவும் உள்ளது.

இது பொறுப்பற்ற முறையில் பொதுமக்களின் உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறது.

ஒரு இறையாண்மை கொண்ட தலைநகரின் நடுவில் தாக்குதல்களை நடத்துகிறது.

ஏற்கெனவே அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு பகுதியை அழிக்க அச்சுறுத்துகிறது என்று அவர் இன்று தனது முகநூலில் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset