நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆங்கில மொழிப் புலமையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை கல்வியமைச்சு துரிதப்படுத்த வேண்டும்: பிரதமர்

கோலாலம்பூர்:

ஆங்கில மொழிப் புலமையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை கல்வியமைச்சு துரிதப்படுத்த வேண்டும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

மாணவர்களிடையே ஆங்கில மொழிப் புலமையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை கல்வியமைச்சு தீவிரப்படுத்த வேண்டும்.

மலேசியாவின் எதிர்கால போட்டித்தன்மைக்கு ஆங்கில மொழிப் புலமை மிகவும் முக்கியமானது.

அதனால் அதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.

ஆங்கிலப் புலமையின் அளவு மிகவும் முக்கியமானது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

இதன் பொருள் கல்வி அமைச்சகம் ஆங்கிலப் புலமையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதாகும்.

அதே நேரத்தில், மலாய் மொழி தேசிய மொழியாகவே உள்ளது. அதை ஒருங்கிணைக்கும் முகவராகப் பாதுகாக்க வேண்டும்.

ஆம் பேங்க் குழுமத்தின் 50ஆவது பொன்விழாவின்  பேசும்போது பிரதமர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset