நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாடுகள் விநியோகத்தில் 200,000 ரிங்கிட் மோசடி 3 அரசு ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது

சிகாமட்:

மாடுகள் விநியோகத்தில் 200,000 ரிங்கிட் மோசடி செய்ததற்காக 3 அரசு ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜோகூரில் உள்ள ஒரு மாவட்டத்தில் பசுக்களை வழங்குவதற்கான கட்டணத்தைக் கோரியதற்காக எம்ஏசிசி அவர்களை கைது செய்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மாடுகளை வழங்குவதற்காக அவர்கள் சுமார் 200,000 ரிங்கிட் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

கைதானவர் 30 முதல் 60 வயதுக்குட்பட்ட ஒரு பெண் உட்பட ஐந்து சந்தேக நபர்கள் ஆவர்.

அவர்கள் நேற்று காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிகாமட் எம்ஏசிசியில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது தனித்தனியாக கைது செய்யப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset