நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாராவின் பள்ளி தலைமையாசிரியருடன் தன்னை தொடர்புபடுத்தி கருத்து தெரிவித்ததற்காக ஃபட்லினா போலிசில் புகார் அளித்தார்

புத்ராஜெயா:

ஷாராவின் பள்ளி தலைமையாசிரியருடன் தன்னை தொடர்புபடுத்தி கருத்து தெரிவித்ததற்காக  கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் போலிசில் புகார் அளித்தார்.

கடந்த ஜூலை மாதம் சபாவில் முதலாம் படிவ மாணவி ஷாரா கைரினா மகாதீர் மரணமடைந்ததார்.

சம்பந்தப்பட்ட மாணவியின் பள்ளி தலைமையாசிரியருடன் தன்னை இணைத்து சமூக ஊடகங்களில்  கருத்துகள்  வெளியாகி வருகின்றது.

பாப்பாரில் உள்ள துன் டத்து முஸ்தபா இடைநிலைப் பள்ளி  தலைமையாசிரியருடன்  தன்னை இணைத்து அவதூறு பரப்பி வருகின்றன.

இதன் அடிப்படையில் போலிஸ், எம்சிஎம்சியில் தாம் புகார் அளித்ததாக ஃபட்லினா சிடெக் கூறினார்.

பள்ளி தலைமையாசிரியருடன் தன்னை இணைக்க பலர் முயற்சித்து வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட அவதூறு என் மறைந்த தாயாரை இணைத்துப் பேசியது.அவர் இந்த உலகில் இல்லை. அவர் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியாது.

தீங்கிழைத்து பரப்பப்பட்ட அவதூறு சமூகத்தில் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset