நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2025 கிக் தொழிலாளர்களுக்கான சட்ட மசோதா மேலவையில் அங்கீகரிக்கப்பட்டது: ஸ்டீவன் சிம்

கோலாலம்பூர்:

2025 கிக் தொழிலாளர்களுக்கான சட்ட மசோதா மேலவையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை கூறினார்.

மலேசியாவில் கிட்டத்தட்ட 1.2 மில்லியனுக்கும் அதிகமான கிக் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் வகையில் இந்த சட்ட மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முக்கிய பணியாளர்களின் ஒரு பகுதியாக இந்த தொழிலாளர்கள் குழுவின் நலன், சமூகப் பாதுகாப்பு, உரிமைகள் உள்ளிட்ட அம்சங்கள் உட்பட விரிவான பாதுகாப்பை இந்த மசோதா வழங்கும்.

இந்நிலையில் இந்த கிக் தொழிலாளர்கள் மசோதா 2025ஐ மேலவையில் நேற்று நிறைவேற்றியது.

இந்த மசோதா 18 செனட் உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்ட பின்னர் ஆதரவாக பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.

மேலும் மசோதா மீதான விவாதத்தை முடித்து வைத்து, தற்போதுள்ள சட்டத்தில் உள்ள பலவீனங்களை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டதாகும்.

குறிப்பாக ஏபிஐ அமைப்புகளை தளங்களுடன் ஒருங்கிணைப்பதன் வாயிலாக தானியங்கி பங்களிப்புகளை  செயல்படுத்தக்கூடிய தன்மை வலியுறுத்தப்பட்ட அம்சங்களில் ஒன்றாகும் என்று ஸ்டீவன் சிம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset