நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவிற்கு வருகை தருவது குறித்து புடின் தீவிரமாக பரிசீலித்து வருகிறார்: பிரதமர் அன்வார்

புத்ராஜெயா:

மலேசியாவிற்கு வருகை தருவது குறித்து 
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தீவிரமாக பரிசீலித்து வருகிறார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

அதிபர் புடினை பெய்ஜிங்கில் நான் சந்தித்தேன்.

இந்த சந்திப்பின் போது மலேசியாவுக்கு வருவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாகக் கூறினார்.

இருப்பினும், புடினின் முன்மொழியப்பட்ட வருகைக்கான காலக்கெடுவை இப்போது கூற முடியாது.

ஆம்பேங்கின் 50ஆவது ஆண்டு விழாவில் டத்தோஸ்ரீ அன்வார் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

முன்னதாக கடந்த மே மாதம் மாஸ்கோவிற்கு பயணம் செய்தபோது டத்தோஸ்ரீ அன்வார் புதினைச் சந்தித்தார்.

அப்போது அவர் ரஷ்யாவை மலேசியாவின் சிறந்த நண்பர் என்று வர்ணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset