நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வோங் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை மலாயா பல்கலைக்கழகம் விளக்கமளிக்க வேண்டும்: ஜம்ரி

கோலாலம்பூர்:

மாணவன் வோங் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை
மலாயா பல்கலைக்கழகம் விரிவாக விளக்க வேண்டும்.

உயர் கல்வியமைச்சர் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காடிர் இதனை கூறினார்.

எஸ்டிபிஎம் தேர்வில் சிறந்து விளங்கிய மாணவர் எட்வர்ட் வோங் உயர்கல்வி நிறுவனத்தில் தனது படிப்பைத் தொடர வாய்ப்பு கிடைக்கவில்லை என  புகார் அளித்துள்ளார்.

இது குறித்து  மலாயா பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும்.

நேற்று எட்வர்ட் வோங் தொடர்பாக மசீச தலைவர் வீ கா சியோங் எழுப்பிய பிரச்சினையைப் பற்றி குறிப்பிட்ட ஜம்ரி, தங்கள் முடிவின் அடிப்படையில் அப் பல்கலைக்கழகம் மேலும் தெளிவுபடுத்த வேண்டும்.

டத்தோஸ்ரீ வீ கா சியோங் எழுப்பியது, வேறொரு பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்த போதிலும், தான் தேர்ந்தெடுத்த பாடத்திட்டத்திலும் பல்கலைக்கழகத்திலும் இடம் கிடைக்காததாகக் கூறப்பட்ட ஒரு மாணவர் பற்றியது.

ஏனெனில் இது வெளியிடப்பட்ட முடிவு என்பதை நாங்கள் அறிவோம்.

ஆக இதற்கு உரிய விளக்கங்கள் வழங்கப்பட வேண்டும் என்று டத்தோஸ்ரீ ஜம்ரி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset