நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா சுரங்க ஊழலில் ஃபர்ஹாஷை எம்ஏசிசி விடுவித்தது; வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தது: டான்ஸ்ரீ அஸாம் பாக்கி

புத்ராஜெயா:

சபா சுரங்க ஊழலில் ஃபர்ஹாஷை எம்ஏசிசி விடுவித்ததுடன் அவர் மீதான வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தது.

எம் ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி இதனை கூறினார்.

சபாவில் நடந்த சுரங்க ஊழலில் தொடர்புடைய குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உதவியாளர் ஃபர்ஹாஷ் வஃபா சால்வடார் ரிசால் முபாரக்கின் பெயரை எம்ஏசிசி விடுவித்துள்ளது.

விசாரணையில் சம்பந்தப்பட்ட தொழிலதிபரின் நிறுவனத்திற்கு எந்த ஆய்வு உரிமமும் வழங்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது.

விசாரணை ஆவணங்கள் சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதில் எந்த தரப்பினர் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்த முடியாது என்றும் அவர் கூறினார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் அழைத்து விசாரணை நடத்தினோம்.

மேலும் சபா மினரல் மேனேஜ்மென்ட், மாநில அரசு, சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் எவரிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பதிவு செய்யப்பட்டது.

இறுதியாக துணை அரசு வழக்கறிஞர், எம்ஏசிசி சட்டம் 2009, தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் எந்தவொரு தரப்பினர் மீதும் எந்தவொரு குற்றவியல் வழக்கையும் சுமத்த முடியாது.

மேலும் நிர்வாகப் பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றும் முடிவு செய்துள்ளார் என்று டான்ஸ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset