நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வானியல் அற்புத நிகழ்வான முழு சந்திர கிரகணத்தை உலகம் முழுவதும் மக்கள் கண்டு ரசித்தனர் 

கோலாலம்பூர்: 

7 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்த வானியல் அற்புத நிகழ்வான முழு சந்திர கிரகணத்தை உலகம் முழுவதும் மக்கள் கண்டு ரசித்தனர். 

மலேசியா, சிங்கப்பூர், துருக்கி, எகிப்து , கென்யா, ஈரான், ஜோர்டன், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா, சீனா, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் முழுமையாக காட்சியளித்த சிவப்பு நிலாவைக் காண மக்கள் பொதுவெளியில் ஒன்று கூடினர்.

நேற்று இரவு முழு சந்திர கிரகணம் நிகழ்ந்தது. சிவப்பு நிலா என அழைக்கப்படும் இந்த அரிய நிகழ்வை, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, லட்சக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். 

நேற்று இரவு 8:58 மணிக்குத் தொடங்கிய சந்திர கிரகணம், அதிகாலை 2:25 மணி வரை நீடித்தது. இரவு 11:01 மணி முதல் 12:23 மணி வரை சந்திரன் முழுவதுமாக பூமியின் நிழலில் மூழ்கி, செந்நிறத்தில் காட்சியளித்தது.

இந்த ஆண்டின் மிக அழகான வானியல் நிகழ்வுகளில் ஒன்றாக இந்த சந்திர கிரகணம் பார்க்கப்படுகிறது.

முழு சந்திர கிரகணத்தை சென்னை வேளச்சேரியில் பொதுமக்கள் வெறும் கண்களால் கண்டு ரசித்தனர். சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வந்தபோது, பூமியின் நிழல் சந்திரனை மறைத்ததால், இந்த அரிய நிகழ்வு நிகழ்ந்தது. 

நேற்றிரவு 11.57 மணிக்கு தொடங்கிய கிரகணத்தில் சந்திரன் அடர்சிவப்பு நிறத்தில் காணப்பட்டதால், அது ’பிளட் மூன்’ என அழைக்கப்பட்டது. இந்த அரிய நிகழ்வை கண்டு மகிழ்ந்த மக்கள், விண்வெளியின் அதிசயத்தை நேரில் பார்த்த திருப்தியை வெளிப்படுத்தினர். 

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset