நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாஸ் மாநாட்டில் பிரதமர் வேட்பாளரை முன்மொழிய வேண்டிய அவசியமில்லை: துவான் இப்ராஹிம்

கோலாலம்பூர்:

வரும் பாஸ் மாநாட்டில் பிரதமர் வேட்பாளரை முன்மொழிய வேண்டிய அவசியமில்லை.

பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் இதனை கூறினார்.

பாஸ் கட்சியின் 71ஆவது பேராளர் மாநாடு அடுத்த வாரம் நடைபெறும்.

இந்த மாநாட்டில் 11ஆவது பிரதமருக்கான வேட்பாளரை முன்மொழிய வேண்டிய அவசியமில்லை.

இதை தவிர மக்கள் மீதான வாழ்க்கைச் செலவுச் சுமையின் நிலைமை, அமெரிக்காவின் அரசியல் புவியியல்,  நாட்டின் மீதான கட்டணங்கள் குறித்து விவாதிப்பது மிகவும் முக்கியமானது.

என்னுடைய கருத்துப்படி, இந்தத் தீர்மானம் இப்போது தேவையில்லை. யார் பிரதமராக இருப்பார்கள் என்பது பற்றிப் பேச இது சரியான நேரமல்ல. மேலும் தேசியக் கூட்டணியை வலுப்படுத்துவது நல்லது.

சபா மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதிலும் மக்களின் பிரச்சினைகளிலும் கவனம் செலுத்துவது நல்லது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset