
செய்திகள் மலேசியா
மாணவர்கள் எண்ணிக்கை சரிவதால் பெருவாஸ் தமிழ்ப்பள்ளி மூடப்படுமா?
மஞ்சோங்:
பெருவாஸ் நகரம் ஒரு காலத்தில் வரலாற்றுபூர்வ தலமாக இருந்துள்ளதாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. இங்குள்ள மூன்று தமிழ்ப்பள்ளிகளான சப்போரா தோட்டத் தமிழ்ப்பள்ளி, சுங்கை பெருவாஸ், பெருவாஸ் தோட்ட தமிழ்ப்பள்ளிகள் ஒன்றிணைக்கப்பட்டு பெருவாஸ் தமிழ்ப்பள்ளி உருமாற்றம் கண்டுள்ளது என்பது இன்றைய நிலைப்பாடாகும்.
இப்பள்ளி காலப்போக்கில் மூடப்படலாம் என்ற அபாயத்தை எதிர்நோக்கி வருகிறது. இதற்கு முதன்மை காரணம் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் எண்ணிக்கை இப்பள்ளியில் சரிந்து வருகிறது என்பதே சான்றாகும்.
தற்போது இப்பள்ளியில் 40 மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். அவர்களுக்காக 14 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதேநிலை நீடிக்குமானால் காலப்போக்கில் இப் பள்ளி மூடப்படலாம். இதற்கு காரணம் மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதுதான்.
பெருவாஸ் வட்டாரத்திலிருந்து பெரும்பாலான மக்கள் வெளியேறி வருகின்றனர். இதற்கு முதன்மை காரணம் இங்கு வேலை வாய்ப்புகள் இல்லை என்பதாகும். தற்போது பெரும்பாலான பிள்ளைகள் தாத்தா பாட்டி பார்வையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதோடு, பெரும்பாலான பெற்றோர்கள் வெளியூர்களில் வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக, ஜோகூர், கோலாலம்பூர், ஈப்போ போன்ற பெருநகர்களில் வேலை செய்து வருகின்றனர்.
பெருவாஸ் வட்டாரத்தில் வேலை வாய்ப்புகள் இருக்குமானால் நாங்கள் ஏன் வெளியே போகிறோம் என்று இங்குள்ள பெற்றோர்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.
இவ்வட்டாரத்தில் தோட்டங்கள் உள்ளன. அவற்றில் அந்நிய நாட்டு தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கு தொழிற்சாலைகள் நிருவப்பட்டால் அதிகமானோர் இங்கு வேலை செய்ய வாய்ப்புகள் உண்டு. அதனால், அவர்கள் குடும்பத்தினருடன் இங்கேயே இருக்கலாம். ஆனால், இங்கு எந்தவொரு தொழிற்சாலையும் இல்லை வேலை வாய்ப்பும் இல்லை என்பது முற்றிலும் உண்மையாகும்.
அதன் அடிப்படையில் தங்களின் வாழ்வாதாரத்தை கட்டிக்காக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இங்குள்ள மக்கள் வெளியேறி வருகின்றனர். இப்படிபட்ட சூழ்நிலையில் பெருவாஸ் தமிழ்ப்பள்ளி நிலைப்பாடும் குறிப்பாக மாணவர்கள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
அதுமட்டுமின்றி, இங்குள்ள ஒரு சிலர் தமிழ்மொழி பற்றும் இந்திய இன பற்றும் இல்லாதவர்கள் பிள்ளைகளை சீனம், மலாய் பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைப்பது மற்றொரு வருத்தமான விசயமாகும்.
பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், பெங்களான் பாரு சட்டமன்ற உறுப்பினரும் இதற்கு தீர்வு காண முற்பட வேண்டும் என்று அங்கு வசிப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆர். பாலச்சந்தர்
தொடர்புடைய செய்திகள்
September 9, 2025, 11:37 am
பாஸ் மாநாட்டில் பிரதமர் வேட்பாளரை முன்மொழிய வேண்டிய அவசியமில்லை: துவான் இப்ராஹிம்
September 9, 2025, 11:00 am
அணுசக்தியை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும்: சார்லஸ்
September 9, 2025, 10:56 am
மின்னல் தாக்கியதில் வங்காளதேச ஆடவர் மரணம்
September 9, 2025, 10:53 am
ஷாரா மருத்துவமனைக்கு வந்தபோது உடலில் வீக்கங்களுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை: டாக்டர் ஜெனிஃபர்
September 8, 2025, 9:59 pm
மற்ற கட்சிகளின் விவகாரங்களில் அம்னோ தலையிடாது: ஜாஹித்
September 8, 2025, 8:56 pm