நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மற்ற கட்சிகளின் விவகாரங்களில் அம்னோ தலையிடாது: ஜாஹித்

கோலாலம்பூர்:

மற்ற கட்சிகளின் விவகாரங்களில் அம்னோ தலையிடாது என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.

அம்னோ மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று வலியுறுத்துகிறது.

மேலும் அந்தக் கொள்கையில் அம்னோ  உறுதியாக உள்ளது.

சுமார் 120 பெர்சத்து பிரிவுத் தலைவர்கள் அதன் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் பதவி விலகவும், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடினிடம் தலைமையை ஒப்படைக்கவும் அழைப்பு விடுக்கும் ஒரு உறுதிமொழிப் பிரகடனத்தில் கையெழுத்திட்டதாக வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறினார்.

இதுவரை மற்ற கட்சிகளின் விவகாரங்களில் தலையிடமாட்டோம் என்ற நிலைப்பாட்டை நாங்கள் எடுத்து வருகிறோம். 

அவர்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு சவால்களிலும் அவர்கள் வெற்றிபெற வாழ்த்துகிறோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset