
செய்திகள் மலேசியா
ஜோ லோவை கண்டுப்பிடிப்பதற்கான நடவடிக்கைகளுக்காக மலேசியா அனைத்துலக ஒத்துழைப்பைத் தொடர்ந்து உருவாக்கும்: புக்கிட் அமான்
கோலாலம்பூர்:
ஜோ லோவை கண்டுப்பிடிப்பதற்கான நடவடிக்கைகளுக்காக மலேசியா அனைத்துலக ஒத்துழைப்பைத் தொடர்ந்து உருவாக்கும்.
புக்கிட் அமான் வணிக குற்றப் புலனாய்வுத் துறை ஒரு அறிக்கையில் இதனை தெரிவித்தது.
1 மலேசியா மேம்பாட்டு பெர்ஹாட் ஊழலுடன் தொடர்புடைய முக்கிய மூளையாக செயல்பட்ட ஜோ லோவை இந்த நாட்டில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள மீண்டும் கொண்டுவரும் முயற்சிகளில் மலேசியா அனைத்துலக சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் தொடர்ந்து ஒத்துழைத்து வருகிறது.
மேலும் அனைத்துலக அதிகாரிகளுடன் ஒத்துழைக்க உறுதிபூண்டுள்ள உள்துறை அமைச்சின் மூலம் இந்த முயற்சி செயல்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.
முன்னதாக ஜோ லோவை சீனாவில் அவர் இருப்பதற்கும் அவருக்கும் தொடர்புபடுத்தும் உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று உள்துறை அமைச்சர் சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் உறுதிப்படுத்தியிருந்தார்.
எனவே, சம்பந்தப்பட்ட நபரை கண்டறியும் முயற்சிகளில் மலேசியா அனைத்துலக சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் நெருக்கமாகச் செயல்பட்டு வருகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 9, 2025, 6:30 pm
மலேசிய இந்திய டிஜே கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் மாபெரும் பீட் தலைவன் போட்டி: குணராஜ் அறிவிப்பு
September 9, 2025, 6:04 pm
ஷாரா கைரினாவின் மரணத்திற்கு எச்ஐஇ சிக்கல்களுடன் கூடிய கடுமையான மூளைக் காயமே காரணம்: டாக்டர் பவன்குமார்
September 9, 2025, 6:00 pm
இந்து சமயம், ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு அரசாங்கத்தின் நிதி உதவிகள் தொடரும்: சிவநேசன்
September 9, 2025, 1:58 pm
டுரியான் துங்கால் செமாபோக் பெர்டானா பாலர்பள்ளியில் சுதந்திர தினப் பேரணி
September 9, 2025, 1:25 pm
மொஹைதின் குற்றச்சாட்டுகளை MCMC இன்னும் விசாரித்து வருகிறது: டிக் டாக்கின் தகவலுக்காகக் காத்திருக்கிறது
September 9, 2025, 1:19 pm
துன் மகாதீர் சொத்துக்கள் குறித்து எம்ஏசிசி இங்கிலாந்திடம் இருந்து தகவல்களைக் கோரியுள்ளது
September 9, 2025, 1:10 pm