நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீன நாட்டவர்கள், இந்தோனேசிய சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு நடத்தப்பட்ட இரண்டு இணைய மோசடி கும்பல் முறியடிப்பு

மலாக்கா:

சீன நாட்டவர்கள், இந்தோனேசிய சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு நடத்தப்பட்ட இரண்டு இணைய மோசடி கும்பல் போலிசாரால்  முறியடிக்கப்பட்டது.

மலாக்கா மாநில போலிஸ் தலைவர் டத்தோ சுல்கைரி முக்தார் இதனை தெரிவித்தார்.

மலாக்கா காவல்துறையின் வணிக  குற்றத் தடுப்புப்பிரிவினர் கடந்த வாரம் இங்குள்ள ஓப்ஸ் மெர்பாத்தி நடவடிக்கையின் மூலம் 3 வெவ்வேறு சோதனைகள் நடத்தப்பட்டது.

இதில் சீன நாட்டவர்கள், ஏழு இந்தோனேசிய சுற்றுலாப் பயணிகளை கொண்டு நடத்தப்பட்ட இரண்டு ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடிக்கப்பட்டது.

செப்டம்பர் 2,3 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், 21 முதல் 60 வயதுடைய மொத்தம் 19 நபர்கள் மாநிலம் முழுவதும் பல இடங்களில் கைது செய்யப்பட்டதாக 

அவர்கள் வெளிநாட்டிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை உள்ளடக்கிய மோசடி நடவடிக்கை மையங்களாகப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி மதியம் 12.30 மணியளவில் முதல் சோதனையில், ஜாலான் துன் பேராக்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தி 21 முதல் 41 வயதுடைய ஏழு இந்தோனேசிய ஆண்களைக் கைது செய்ய முடிந்தது.

3 சொகுசு கார்கள், ரொக்க பணம், 8 மடிக்கணினிகள், 21 கையடக்கபேசிளையும் போலிசார் பறிமுதல் செய்தனர்.

இதன் மொத்த மதிப்பு வெ 550,000 ஆகும். சட்டப்பூர்வமாக சுற்றுலாப் பயணிகளின் அனுமதிச் விசாக்களுடன் அனைத்து சந்தேக நபர்களும் மலேசியாவிற்குள் நுழைந்தனர்.

கடந்த மூன்று மாதங்களாக இந்தோனேசிய வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு, முகநூல் செயலி மூலம் மலிவான விலையில் கையடக்கபேசிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களை விளம்பரப்படுத்த கும்பல் செயல்பட்டு வந்ததாக நம்பப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர் தொலைவரி மூலம் தொடர்பு கொள்ளப்பட்டு, சந்தேக நபர் வாடிக்கையாளர் சேவை அதிகாரியாகக் காட்டிக் கொண்டார்.

பின்னர் பாதிக்கப்பட்டவர் இந்தோனேசியாவில் உள்ள ஒரு மத்திய வங்கி கணக்கிற்கும் ShopeePayக்கும் முன்கூட்டியே பணம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டார்.

இருப்பினும், பணம் செலுத்திய பிறகும், பாதிக்கப்பட்டவருக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட பொருட்கள் கிடைக்கவில்லை.

அவரது தொடர்புகள் தொடர்ந்து தடுக்கப்பட்டதாகவும் சுல்கைரி கூறினார். 

கும்பல் தலைவரிடமிருந்து அனைத்து சந்தேக நபர்களும் மாத சம்பளம் வெ 1,000 முதல் வெ 2,000 வரை பெற்றதாக ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.

மேலும்  25,000 ரிங்கிட் மதிப்புள்ள 7 மடிக்கணினிகள்,3 கார்கள் மற்றும் 8 கையடக்க பேசிகளையும் போலிசார் பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையில், அடுத்த நாள் நடந்த இரண்டாவது நடவடிக்கையில், போலீசார் ஆயர்குரோவில் உள்ள ஒரு சொகுசு வீட்டை சோதனை செய்து 8 நபர்களைக் கைது செய்தனர்.

1  உள்ளூர் ஆண், 2 பிலிப்பைன்ஸ் பெண்கள் மற்றும் 30 முதல் 60 வயதுக்குட்பட்ட 5 சீன ஆண்கள். விசாரணையின் முடிவுகள் பண்டார் ஹிலிரில் உள்ள ஒரு வீட்டில் தொடர்ச்சியான சோதனைக்கு வழிவகுத்தன.

மேலும் 24 முதல் 32 வயதுக்குட்பட்ட 4 சீன ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.இந்த கும்பல் கடந்த மூன்று மாதங்களாக தொலைவரி செயலி மூலம் சீன குடிமக்களுக்கு இல்லாத பாலியல் சேவைகளை விளம்பரப்படுத்தும் முறையில் செயல்பட்டு வருவதாக விசாரணையில் கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset