நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்மாயில் சப்ரியும் அவரின் முன்னாள் செயலாளரும் 169 மில்லியன் ரிங்கிட் தொகையை பறிமுதல் செய்வதற்கான எம்ஏசிசியின் விண்ணப்பத்தை வினா தொடுக்க விரும்பவில்லை

கோலாலம்பூர்:

இஸ்மாயில் சப்ரியும் அவரின் முன்னாள் செயலாளரும் 169 மில்லியன் ரிங்கிட்  தொகையை பறிமுதல் செய்வதற்கான எம்ஏசிசியின் விண்ணப்பத்தை வினா எழுப்ப விரும்பவில்லை.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், அவரது முன்னாள் அரசியல் செயலாளர் டத்தோ முஹம்மது அனுவார் முஹம்மது யூனுஸ் ஆகியோருக்கு சொந்தமானது என நம்பப்படும் 169 மில்லியன் அதிகமான பணத்தை எம்ஏசிசி பறிமுதல் செய்தது.

இந்நிலையில் கைப்பற்றப்பட்ட பணத்தை பறிமுதல் செய்வதற்கான அரசு தரப்பு விண்ணப்பத்தை வினா எழுப்ப விரும்பவில்லை என்று இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி சுசானா ஹுசின் முன் வழக்கு விசாரணையின் போது எம்ஏசிசி துணை அரசு வழக்கறிஞர் மஹாடி அப்துல் ஜுமாத் இந்த விஷயத்தை அறிவித்தார்.

பிரதிவாதிகள் இருவரும் (இஸ்மாயில் சப்ரி, முஹம்மது அனுவார்) தங்கள் வழக்கறிஞர்கள் மூலம் ஆகஸ்ட் 28 தேதியிட்ட கடிதத்தை நீதிமன்றத்திற்கு அனுப்பி தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்ததாக மஹாடி கூறினார்.

இந்த விண்ணப்பத்திற்காக எம்ஏசிசி சட்டம் 2009 இன் பிரிவு 41(2) இன் கீழ் மூன்றாம் தரப்பு வர்த்தமானியை வெளியிட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.

மேலும் செயல்முறையை விரைவுபடுத்த முயற்சிப்போம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset