நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாரா மருத்துவமனைக்கு வந்தபோது உடலில் வீக்கங்களுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை: டாக்டர் ஜெனிஃபர்

கோத்தா கினபாலு:

மறைந்த ஷாரா கைரினா மகாதிர் குயின் எலிசபெத் மருத்துவமனைக்கு வந்தபோது நோயாளியின் உடலில் வீக்கங்களுக்கான அறிகுறிகள் அல்லது துஷ்பிரயோகத்திற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.

மருத்துவமனையின் அவசர சிகிச்சை துறையின் மருத்துவர் டாக்டர் ஜெனிஃபர் வூ இதனை தெரிவித்தார்.

கடந்த ஜூலை 16 அன்று அதிகாலை 4.38 மணிக்கு மயக்கமடைந்த நிலையில் ஷாராவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட காயங்களில் தலையின் பின்புறத்தில் வீக்கம், இரத்தப்போக்கு, இடது மணிக்கட்டில் மூடிய எலும்பு முறிவு, இடது கணுக்காலில் திறந்த எலும்பு முறிவு, வலது கணுக்காலில் மூடிய எலும்பு முறிவு ஆகியவை அடங்கும்.

பரிசோதனைக்குப் பிறகு, நரம்பியல் அறுவை சிகிச்சை, எலும்பியல், அறுவை சிகிச்சை, மயக்க மருந்து குழுக்களுக்கு உடனடி பரிந்துரைக்காக, ஜூலை 16ஆம் தேதி அதிகாலை 4.42 மணிக்கு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் "Trauma Alert" செயல்படுத்தப்பட்டது.

எனது மதிப்பீட்டின் அடிப்படையில், நோயாளிக்கு கடுமையான மூளையில் காயம், தலையின் பின்புறத்தில் காயங்கள், கணுக்கால், இடது மணிக்கட்டில் எலும்பு முறிவுகள், உள் இரத்தப்போக்கு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் நோயாளியின் உடலில் எந்தவிதமான வீக்கங்களோ அல்லது துஷ்பிரயோக அறிகுறிகளோ இல்லை.

இங்குள்ள மரண விசாரணை நீதிமன்றத்தில் சாட்சி வாக்குமூலத்தை வாசித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset