நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துங்கு அஸிசா டிக்டோக்கில்  உதவி வழங்கவில்லை: பகாங் அரண்மனை

குவாந்தான்:

பகாங் தெங்கு அம்புவான் துங்கு அஸிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா, டிக்டோக் தளம் வழியாக பொதுமக்களுக்கு எந்த வகையான உதவியையும் வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டை பகாங் அரண்மனை இன்று மறுத்துள்ளது.

டத்தோ முகமது யூசுப் என்ற பெயரைப் பயன்படுத்தி ஒரு டிக்டோக் கணக்கு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக பகாங் அரண்மனை அறிவித்துள்ளது. 

இந்த கணக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் துங்கு அசிசாவின் முகத்தை மாற்றி பொதுமக்களை தீவிரமாக ஏமாற்றுவது கண்டறியப்பட்டது.

இந்தச் செயல் பொறுப்பற்ற மோசடி முயற்சி.

மேலும் அரச நிறுவனத்தின் பிம்பத்தை பாதிக்கக்கூடும் என்றும் பகாங் அரண்மனை வலியுறுத்தியது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset