நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்சத்து மாநாட்டில் கலந்து கொண்ட விவகாரம்: மஇகா கடிதத்திற்காக காத்திருக்கிறது, விளக்கம் அளிக்கவும் தயார்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்:

பெர்சத்து மாநாட்டில் கலந்து கொண்ட விவகாரம் தொடர்பில் மஇகா கடிதத்திற்காக காத்திருக்கிறது.

விளக்கம் அளிக்கவும் மஇகா தயார் என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் கூறினார்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பெர்சத்து இளைஞர் பகுதியின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் மஇகா இளைஞர் பிரிவினர் கலந்து கொண்டனர்.

இந்த நடவடிக்கைகள் குறித்து தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ அகமது ஜாஹித் ஹமிடிக்கு விளக்கம் அளிக்க மஇகா தயாராக உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தேசிய முன்னணியிடம் இருந்து மஇகாவுக்கு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ கடிதமும் வரவில்லை.

மஇகா இன்னும் கடிதத்திற்காகக் காத்திருக்கிறது. அது அதிகாரப்பூர்வ கடிதம் கிடைத்தவுடன் எழுத்துப்பூர்வ விளக்கத்தை வழங்குவோம் என்று அவர் கூறினார்.

கூடுதலாக சம்பந்தப்பட்ட தலைவருக்கு எதிராக ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டதா என்று கேட்டபோது, ​​

இதுவரை எந்த ஒழுங்கு நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்படவில்லை என்று டானஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset