நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் மீதான அன்பின் உணர்வை வளர்க்க இளம் தலைமுறையினர் வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்: பிரதமர்

புத்ராஜெயா:

நாட்டின் மீதான அன்பின் உணர்வை வளர்க்க இளம் தலைமுறையினர் வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

இளைய தலைமுறையினரிடம் நாட்டின் மீதான ஆர்வத்தை வளர்ப்பதற்கும், தேசபக்தி உணர்வை ஊட்டுவதற்கும் வரலாற்று புரிதலை வலுப்படுத்தும் முயற்சிகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

நாடு இலக்கவியல் மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு காப்தத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

ஆக இளைஞர்கள் எப்போதும் சரியான பாதையில் செல்லும் வகையில் வரலாற்று அம்சத்தை வலியுறுத்த வேண்டும்.

எனவே, இளைய தலைமுறையினர், சமூகத்தினரிடையே வரலாற்று விழிப்புணர்வு அல்லது வரலாற்று எழுத்தறிவு வளரும் வகையில், தற்போதுள்ள தடைகளை உடைக்கக்கூடிய ஒரு தேசிய கதையை எவ்வாறு உருவாக்குவது என்பது நமது சவாலாகும்.

வரலாற்றின் போதனைகளிலிருந்து அனைவரும் ஒழுக்கத்தையும் நிலைத்தன்மையையும் பெற வேண்டிய அவசியமில்லை.

ஆனால் வரலாற்றின் அம்சத்தில் ஆர்வத்தை வழங்க வேண்டும்.

புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் தேசிய வரலாற்றாசிரியர்கள் வாரிய வெளியீடு, சான்றுகளை வழங்குதல், கூட்டத்தில் அவர் தனது உரையில் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset