நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டான்ஸ்ரீ மொஹைதினை 11ஆவது பிரதமராகப் பெயரிட்டு பெர்சத்து கட்சி தீர்மானம் நிறைவேற்றியது

ஷாஆலம்:

டான்ஸ்ரீ மொஹைதினை நாட்டின் 11ஆவது பிரதமராகப் பெயரிட்டு பெர்சத்து கட்சி தீர்மானம் நிறைவேற்றியது.

பெர்சத்து கட்சியில் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி இதனைக் கூறினார்.

பெர்சத்துவின் 11ஆவது பிரதமர் வேட்பாளராக டான்ஸ்ரீ மொஹைதின் யாசினை முன்மொழியும் தீர்மானத்திற்கு பெர்சத்து ஆண்டு பொதுக் கூட்டம் இன்று ஒப்புதல் அளித்தது.

மேலும் பெர்சத்து தலைவராக டான்ஸ்ரீ மொஹைதின் யாசினின் தலைமையையும் கூட்டம் முழுமையாக ஆதரித்தது.

இந்தத் துறையில் தொடர்ந்து கடினமாக உழைத்து தேர்தல் இயந்திரத்தின் திறன்களை மேம்படுத்துவதில் பிரதிநிதிகள் குழு உறுதியாக உள்ளது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

வாழ்க்கைச் செலவு, உலகளாவிய மற்றும் பிராந்திய பொருளாதாரங்கள், மக்களின் ஒற்றுமை, தற்போதைய அரசியல் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை குழு உறுப்பினர்கள் பாராட்டி விவாதித்துள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset