நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் மருத்துவ அலட்சியத்திற்காக 2.28 மில்லியன் ரிங்கிட் செலுத்த அரசாங்கம் நீதிமன்றம் உத்தரவு

புத்ராஜெயா:

கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் மருத்துவ அலட்சியத்திற்காக 2.28 மில்லியன் ரிங்கிட் செலுத்த அரசாங்கம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

15 ஆண்டுகளுக்கு முன்பு கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் பிரசவத்தின்போது மருத்துவ அலட்சியத்தால் ஒருவர் நிரந்தர மூளை பாதிப்புக்குள்ளானார்.

இந்நிலையில் அவருக்கு 2.28 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்குமாறு இங்குள்ள உயர் நீதிமன்றம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

ஒரு இளம் மருத்துவ அதிகாரி, மருத்துவமனையின் மகப்பேறியல், மகளிர் மருத்துவத் துறையின் முன்னாள் தலைவரின் அலட்சியமான செயல்களுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று கண்டறிந்த பின்னர் நீதித்துறை ஆணையர் கான் டெச்சியோங் இந்த முடிவை எடுத்தார்.

விசாரணையின் போது நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது வாதியின் நிலையை விவரிக்கும் போது டெச்சியோங் மனம் உடைந்தார் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

மூளை வாதத்தின் மிகவும் தீவிரமான கட்டத்தில் இருப்பதாக வகைப்படுத்தப்பட்ட வாதியால் தலையைத் தூக்க முடியவில்லை.

மேலும் வாழ்நாள் முழுவதும் ஒரு குழாய் வழியாக உணவளிக்க வேண்டியிருக்கும் என்றும் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset