நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமர், அரசுக்கு எதிராக மிரட்டல் செய்திகளைப் பதிவேற்றியதற்காக இரண்டு பேர் கைது: டத்தோ குமார்

கோலாலம்பூர்:

பிரதமருக்கும் அரசுக்கும் எதிராக மிரட்டல் செய்திகளைப் பதிவேற்றியதற்காக இரண்டு பேர் போலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் இதனை தெரிவித்தார்.

குற்றவியல் அச்சுறுத்தல்கள், தூண்டுதல்கள், அரசாங்கத்திற்கும் பிரதமருக்கும் எதிரான பொய்யான குற்றச்சாட்டுகள் அடங்கிய பதிவுகளை சமூக ஊடகங்கள் வழியாக அவர்கள் பதிவேற்றியுள்ளனர்.

இதன் அடிப்படையில் 44, 45 வயதுடைய இரண்டு ஆண்களை போலிசார் கைது செய்துள்ளனர்.

முகமது சோய் (@mohd.soie3) என்ற டிக்டாக் கணக்கு மூலம் அரசாங்கத்திற்கு எதிரான தூண்டுதல், அவமதிப்பு கூறுகளைக் கொண்ட பதிவை வெளியிட்டதாக சந்தேகிக்கப்படும் 45 வயது நபர் முதலில் கைது செய்யப்பட்டார்.

அடுத்த நடவடிக்கையில் 44 வயதுடைய மற்றொரு நபர் கைது செய்யப்பட்டார்.

அவர் Mdjohan Ngadin என்ற முகநூல் கணக்கைப் பயன்படுத்தி பிரதமருக்கு எதிராக குற்றவியல் அச்சுறுத்தல்களைக் கொண்ட கருத்தை வெளியிட்டதாக சந்தேகிக்கப்படுகிறார் என்று அவர்  தெரிவித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset