நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுல்தான் நஸ்ரினை தாக்க முயன்ற  பெண் மீது வன்முறை குற்றச்சாட்டு

ஈப்போ:

பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரினை தாக்க முயன்ற பெண் மீது வன்முறை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

பேரா மாநில அளவிலான தேசிய தின கொண்டாட்டங்களின் போது, ​​பேரா சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷாவை பெண்  ஒருவர் தாக்க முயன்றார்.

இந்நிலையில் அப்பெண் மீது ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவியல் வன்முறை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அவர் மீதான குற்றப்பத்திரிகை மாஜிஸ்திரேட் முகமட் ஹரித் முகமட் மஸ்லான் முன் வாசிக்கப்பட்டது.

41 வயதான நூர்ஷஸ்வானி அஃப்னி முஹம்மத் சோர்கி அதை புரிந்து கொண்டதாக தலையசைத்தார். ஆனால் எந்த மனுவும் பதிவு செய்யப்படவில்லை.

மேலும் சுல்தானுக்கு எதிராக குற்றவியல் வன்முறையைச் செய்த குற்றவியல் சட்டத்தின் பிரிவு 352 இன் கீழ் நூர்ஷஸ்வானி அஃப்னி மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது 1,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset