நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சாரா உதவி தொகையின் போது வர்த்தகர்கள் பொருட்களின் விலைகளை உயர்த்துவதில்  அரசாங்கம் சகித்துக் கொள்ளாது: அமீர் ஹம்சா

புத்ராஜெயா:

சாரா உதவி தொகையின் போது வர்த்தகர்கள் பொருட்களின் விலைகளை உயர்த்துவதில் அரசாங்கம் சகித்துக் கொள்ளாது.

இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் இதனை கூறினார்.

சாரா எனப்படும் அடிப்படை ரஹ்மா பங்களிப்பு பாராட்டு முயற்சியை செயல்படுத்துவதன் மூலம் மக்கள் அனுபவிக்க வேண்டிய நன்மைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சிக்கும் எந்தவொரு கட்சியுடனும் அரசாங்கம் சமரசம் செய்யாது.

ஒரு சில வர்த்தகர்கள் பொருட்களின் விலைகளை உயர்த்துவதாகக் கூறும் பல பதிவுகள் சமூக ஊடகங்களில் வெளியானதை அமைச்சு அறிந்துள்ளது.

இது நடந்தால், விலைக் கட்டுப்பாடு, இலாப எதிர்ப்புச் சட்டம் 2011 இன் கீழ் விசாரணைகள் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படலாம். மேலும் மடானி அரசாங்கம் இந்த புகாரை விசாரிக்கும். 

அதே நேரத்தில், பயனாளிகளுக்கு சிறப்பு விலைகளை வழங்கும் பல்பொருள் அங்காடிகள், சில்லறை விற்பனைக் கடைகளின் முயற்சியை அரசாங்கம் பாராட்டுகிறது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset