நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாலஸ்தீன ஆதரவாளர்கள் உள்ளே நுழைவதைத் தடுத்ததற்காக  சூரியா கேஎல்சிசியை பிடிஎஸ் மலேசியா கண்டித்தது

கோலாலம்பூர்:

பாலஸ்தீன ஆதரவாளர்கள் உள்ளே நுழைவதைத் தடுத்ததற்காக சூரியா கேஎல்சிசியை பிடிஎஸ் மலேசியா கண்டித்தது.

பாலஸ்தீன ஆதரவு பேரணியில் பங்கேற்ற பலர் நேற்று பேரங்காடிக்குள் நுழைவதை சூரியா கேஎல்சிசி நிர்வாகம் தடுத்தது.

அந்நிர்வாகத்தின் நடவடிக்கையை விலக்கு, தடைகள் (பி.டி.எஸ்) குழு மலேசியா கண்டித்துள்ளது.

காசாவில் இனப்படுகொலையை எதிர்த்துப் போராடுபவர்களையும் பாலஸ்தீன மக்களின் உரிமைகளை ஆதரிப்பவர்களையும் சாத்தியமான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் என்று நடத்துவது ஒரு சியோனிச ஆதரவு நாட்டில் எதிர்பார்க்கப்படலாம்.

ஆனால் மலேசியாவில் அவ்வாறு நடக்கக்கூடாது என்று பிடிஎஸ் மலேசியா கூறியது.

பாதுகாப்பு ஊழியர்களால் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டவர்களிடம் பேரங்காடி நிர்வாகம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

குறிப்பாக முன்னாள் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா  தகராறில் ஈடுபட்டதற்கும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்தக் குழு வலியுறுத்தியது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset