நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணியுடனான பிபிபி கட்சியின் உறவு  நீடிக்கும்: டத்தோ லோகபாலா அறிவிப்பு

ஈப்போ:

தேசிய முன்னணியுடனான பிபிபி கட்சியின் உறவு  நீடிக்கும் என்று அதன் தலைவர் டத்தோ லோகபாலா அறிவித்தார்.

கஷ்டங்களை எதிர்நோக்கும் போது உடன் இருப்பதுதான் நியாயம். நாங்கள் விலகமாட்டோம். தேசிய முன்னணிக்கு தொடர்ந்து ஆதரவை வழங்குவோம்.

இங்குள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்ற பி்பிபி கட்சியின் மாநில மாநாட்டில் தலைமை உரையாற்றியப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு பதில் அளித்தார்.

ஒரு சமயத்தில் எங்களது கட்சியின்  முன்னாள் தலைவர் ஒருவர் தேசிய முன்னணியில் இருந்து விலக  முடிவெடுத்தார்.

பெரும் பான்மையான உச்சமன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை முறியடித்தோம் என்று விளக்கம் அளித்தார்.

தேசிய முன்னணி எங்களுடைய ஆதரவு தேவையில்லை என்றால் அதில் இருந்து விலகி தனித்து நின்று மக்களுக்காக எங்களின் சேவையை தொடருவோம்.

முன்னதாக மாநாட்டில் உரையாற்றிய டத்தோ லோகபாலா,  மக்கள் முற்போக்கு கட்சியான பிபிபி மக்கள் நலனை கருத்தில் கொண்டு சேவை வழங்கி வருகிறோம் .

ஆகவே மக்கள் எதிர்நோக்கும் பொருள் விலை ஏற்றத்தைக்  கருத்தில் கொண்டு மக்களுக்கு சுமையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset