நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சாரா 100 ரிங்கிட் உதவித் தொகை என்பது ஒரு தீர்வல்ல: பிரதமர்

கோலாலம்பூர்:

சாரா 100 ரிங்கிட் உதவித் தொகை என்பது ஒரு தீர்வல்ல என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் கூறினார்.

18 வயது, அதற்கு மேற்பட்ட வயதுடைய தனிநபர்களுக்கு ஒருமுறை அடிப்படை ரஹ்மா பங்களிப்பு  சாரா 100 ரிங்கிட் உதவித் தொகை வழங்கப்பட்டது.

இந்த 100 ரிங்கிட் என்பது ஒரு தீர்வல்ல.
மாறாக வாழ்க்கைச் செலவின் அழுத்தத்தை எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவுவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

நாம் சாரா பற்றிப் பேசும்போது,   சிலர் 100 ரிங்கிட் எதற்கு என்று கேலி செய்து சொல்வார்கள். 

ஆனால் அவர்கள் சாரா என்பது மைசாரா உடன் கூடுதலாகும். மேலும் எஸ்டிஆர் உடன் கூடுதலாகும் என்பதை மறந்து விடுகிறார்கள். 

கிட்டத்தட்ட  ஒன்பது மில்லியன் மக்களுக்கு  விநியோகிக்கித்துள்ளோம்.

இது அவர்களுக்கு பயன் அளித்தது என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset