நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முக்கிய ஊழல் வழக்கின் விவரங்களை எம்ஏசிசி செவ்வாய்க்கிழமை அறிவிக்கும்: டான்ஸ்ரீ அஸாம் பாக்கி

கோலாலம்பூர்:

முக்கிய ஊழல் வழக்கின் விவரங்களை
எம்ஏசிசி வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கும்.

எம்ஏசிசி தலைமை ஆனையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி இதனை கூறினார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்,  ஓப் சிகாரோ, டிபிகேஎல் மூத்த நிர்வாகம் சம்பந்தப்பட்ட பல உயர்மட்ட ஊழல் வழக்குகளின் சமீபத்திய முன்னேற்றங்கள் எம்ஏசிசி வரும்  செவ்வாய்க்கிழமை அறிவிக்கும்.

சம்பந்தப்பட்ட வழக்குகளின் அனைத்து சமீபத்திய முன்னேற்றங்களும் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கப்படும்.

கடந்த ஆண்டு நடந்தவை உட்பட பல ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அவற்றின் முன்னேற்றங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதில் ஓப்ஸ் சிகாரோ குறித்து நாங்கள் இன்னும் விசாரணைகளை நடத்தி வருகிறோம்.

மேலும் சட்டவிரோத நடவடிக்கைகளில் இருந்து வருமானம் ஈட்டிய நபர்களையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம்.

எனது அதிகாரிகள் இன்னும் பகுப்பாய்வு செய்து வருகின்றனர். ஏனெனில் இதில் பல கணக்குகள், நூற்றுக்கணக்கான கணக்குகள் ஈடுபட்டுள்ளன.

அதனால்தான் நாங்கள் இன்னும் துல்லியமான தகவல்களை வழங்க தாமதம் கேட்கிறேன் என்று அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset