நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காஜாங் இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் நடந்த மீலாது விழாவில் 800 பேர் கலந்து கொண்டனர்: டத்தோ அப்துல் ஹமித்

காஜாங்:

காஜாங் இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் நடந்த மீலாது விழாவில் 800 பேர் கலந்து கொண்டனர்.

பள்ளிவாசல் தலைவர் பிரபல தொழிலதிபருமான டத்தோ ஹாஜி பிவி அப்துல் ஹமித் இதனை கூறினார்.

கடந்த  சனிக்கிழமை காஜாங் இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் 1500ஆவது மீலாது விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

பள்ளிவாசல் செயலாளர் துவான் முஹம்மது அலி  நிகழ்ச்சியை நெறிப்படுத்த உஸ்தாத் அப்துல் நாசர் சிராஜி தொடக்க உரையாற்றினார்.

சிறப்பு பேச்சாளராய் உஸ்தாத் டாக்டர் சதீதுத்தீன் ஃபாஜில் பாகவி 'சீரான வாழ்க்கைக்கு சீரத்துந் நபி' அவசியம் என்ற தலைப்பில் மிகச் சிறப்பாய் உரையாற்றினார்கள் . 

மதரஸாவின் குழந்தைகள் திருக்குர்ஆனின் வசனங்களை ஓத , மாணவிகள் நபியை புகழ்பாடி கீதம் இசைத்தனர்.

மேலும் இவ்விழாவில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு அன்பளிப்பு ஊக்கத் தொகையுடன் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

இஸ்லாமியப் பெருமக்களும் உலமாக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இதுபோன்ற விழாக்கள் வரும் ஆண்டுகளில் இன்னும் சிறப்பாக நடைபெறும்.

அதற்கான முயற்சிகளை காஜாங் இந்திய முஸ்லிம் பள்ளிவாசல் மேற்கொள்ளும் என்று டத்தோ அப்துல் ஹமித் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset