
செய்திகள் மலேசியா
இறைவனுக்காக 1000 தேங்காய் உடைத்து சீன் போட தேவையில்லை; மனம் உருகி ஒரு சொட்டு கண்ணீர் விட்டாலே போதும்: டத்தோஸ்ரீ சரவணன்
ஈப்போ:
இறைவனுக்காக 1000 தேங்காய் உடைத்து சீன் போட தேவையில்லை. மனம் உருகி ஒரு சொட்டு கண்ணீர் விட்டாலே போதுமானதாகும்.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
அடிப்படை இந்து சமய நூல் வெளியீட்டு விழா ஈப்போ மகா மாரியம்மன் ஆலய திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது.
ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் ஏற்பாட்டில் வெளியீடு காணப்பட்ட து.
இந்த நிகழ்வில் சிறப்பு வருகை புரிந்த டத்தோஸ்ரீ. சரவணன் இந்த சமய நூலினை வெளியீடு செய்து 10 ஆயிரம் ரிங்கிட் நிதியையும் வழங்கினார்.
இவ்விழாவில் பேசிய அவர், மத நம்பிக்கைக்கு புறம்பான செயல்களில ஈடுபடக்கூடாது.
அடிப்படை சமய அறிவைத் தெரிந்துக்
கொள்ள இந்த அடைப்படை சமய நூல் பெரும் உதவியாக இருக்கும்.
இந்து சமயம் நல்ல தத்துவங்களை கொண்டது சமயமாகவும் விளங்கி வருகிறது.
அதனை புரிந்துகொண்டால் , இந்து சமயத்தவர்கள் பல்வேறு மூட நம்பிக்கையில் ஈடுபடுவதை தவிரக்கலாம்.
ஆலயங்களில் சமய வகுப்புகளை நடத்த வேண்டும்.
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்து சமய அறிவை புகுட்டபடவேண்டும்.
அவர்களை சமய வகுப்புகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இதற்கு ஆலயங்கள் பங்கினை ஆற்றிட வேணடும்.
பல ஆலயங்களில் சமய வகுப்புகள் நடத்தப்படுகிறது. அவைகளை போன்று அனைத்து ஆலயங்களிலும் நடத்தப்பட வேண்டும் என்று டத்தோஸ்ரீ சர வணன் ஆலோசனை வழங்கினார்.
இந்த நூலினை தயார் படுத்த 5 ஆண்டுகள் பிடித்ததாக நூலாசரியரும் ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவி்ன் செயலவை உறுப்பினருமான டாக்டர் சசிதரன் கூறினார்.
இந்த் நூல் எளிய முறையில் இந்து சமயத் தத்துங்களை படித்து தெரிந்துக்கொள்ள வாய்ப்பை வழங்குகிறது என்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 8, 2025, 1:31 pm
தேசிய முன்னணியுடனான பிபிபி கட்சியின் உறவு நீடிக்கும்: டத்தோ லோகபாலா அறிவிப்பு
September 8, 2025, 1:28 pm
சுல்தான் நஸ்ரினை தாக்க முயன்ற பெண் மீது வன்முறை குற்றச்சாட்டு
September 8, 2025, 12:01 pm
பாலஸ்தீன ஆதரவாளர்கள் உள்ளே நுழைவதைத் தடுத்ததற்காக சூரியா கேஎல்சிசியை பிடிஎஸ் மலேசியா கண்டித்தது
September 8, 2025, 11:41 am
நாட்டின் மீதான அன்பின் உணர்வை வளர்க்க இளம் தலைமுறையினர் வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்: பிரதமர்
September 8, 2025, 11:27 am
காரில் பெண்ணின் சடலம்; 6 பேர் கைது: போலிசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவர் தலைமுறைவு
September 8, 2025, 11:00 am
பிரதமர், அரசுக்கு எதிராக மிரட்டல் செய்திகளைப் பதிவேற்றியதற்காக இரண்டு பேர் கைது: டத்தோ குமார்
September 7, 2025, 9:57 pm