நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முஹம்மத் ஹசானின் அறிவுரையை பார்த்து சிரிப்பதா அழுவதா என்று எனக்கு தெரியவில்லை: டத்தோஸ்ரீ சரவணன்

ஈப்போ:

முஹம்மத் ஹசானின் அறிவுரையை  பார்த்து சிரிப்பதா அழுவதா என்று எனக்கு தெரியவில்லை.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

தேசிய முன்னணி துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹ்சானின் அறிவுரையை மஇகா கவனத்தில் கொண்டுள்ளது.

இருந்தாலும் சமூகத்தின் கண்ணியம், கூட்டணி அரசியலின் கொள்கைகள் ஆபத்தில் இருக்கும்போது கட்சி அமைதியாக இருக்காது.

மஇகா எப்போதும் உறுதியாகவும், நிலையாகவும், கொள்கையுடனும் குரல் கொடுத்து வருகிறது.

உண்மையான பிரச்சினை மஇகாவின் மௌனம் அல்ல. மாறாக கூட்டணி நம்பிக்கையை அம்னோ கெடுப்பது காரணம்.

அம்னோவே அதன் கூட்டணி நண்பர்களை புல்டோசர் மூலம் அடித்து நொறுக்கி, அரண்மனையை தவறாக வழிநடத்தியது.

தேசிய முன்னணியின் சொந்த தீர்மானங்களை அது புறக்கணித்தது.

இப்போது மஇகாவை பேசுவது குறித்து உபதேசிப்பது நியாயமற்றது மட்டுமல்ல. மிகவும் முரண்பாடானது என்று அவர் கூறினார்

15ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு தேசிய முன்னணி டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி ஒருதலைப்பட்சமாக அரண்மனைக்கு ஒரு கடிதத்தை அனுப்பிய போது தேசிய முன்னணி நெருக்கடிக்கு தள்ளப்பட்டது.

அதில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை பிரதமராக தேசிய முன்னணி ஆதரிப்பதாகக் கூறியது.

இது தேசிய முன்னணி உச்ச மன்றத்தின் அறிவு, ஒப்புதல், ஆணை இல்லாமல் செய்யப்பட்டது.

இந்த துரோகம் வெளிச்சத்திற்கு வந்தபோது,   நான்கு உறுப்பு கட்சிகளில் மூன்று ஒருமனதாக ஜாஹித் பதவி விலக வேண்டும்.

மேலும் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான்  தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என்றும் ஒப்புக்கொண்டன்.

முஹம்மத் ஹசான் இதனை ஒப்புக் கொண்டார். ஆனால் நேரம் வந்தபோது,   அவர் அமைதியாக இருந்தார்.

ஆக தேசிய முன்னணியின் சொந்தத் தீர்மானங்களை அமல்படுத்த முடியாவிட்டால், கூட்டங்களில் விஷயங்களைப் பற்றி விவாதிப்பது குறித்து மற்றவர்களுக்குப் போதிப்பதில் என்ன பயன் என்று டத்தோஸ்ரீ சரவணன் கேள்வி எழுப்பினார்.

அனைத்து தேசிய முன்னணி வேட்பாளர்களும் சட்டப்பூர்வ அறிவிப்புகளில் கையெழுத்திட நிர்பந்திக்கப்பட்டனர்

ஆனால் அது தேசிய முன்னணி உச்ச மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படவில்லை.

மேலும் ஆறு மாநிலத் தேர்தல்களின் போது,   அனைத்து இட ஒதுக்கீடுகளும் ஒருதலைப்பட்சமாக செய்யப்பட்டதாக டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

15ஆவது பொதுத் தேர்தலுக்கு பிறகு அமைச்சரவை நியமனங்கள் ஒருபோதும் தாக்கல் செய்யப்படவில்லை அல்லது தேசிய முன்னணி உச்சமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.

உச்சகட்டமாக டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் தொடர்பான கூடுதல் உத்தரவு உண்மையில் உள்ளது என்று நீதிமன்றங்கள் முடிவு செய்தது.

இதனைத் தொடர்ந்து கூட்டணியில் இணைந்திருக்க வேண்டுமா அல்லது பொறுப்பானவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டுமா என்பது தேசிய முன்னணி உச்சமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.

இவ்விவகாரத்தில் மீண்டும் அமைதி தான் நிலவியது என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

தோக் மாட் ஒரு நல்ல நண்பர். அவர் எப்போதும் அவரை உயர்வாக மதிக்கப்படுபவர்.

தேசிய முன்னணி கூட்டங்களில் விவாதங்கள் குறித்த அவரின் இந்த திடீர் கவலையைப் பார்க்கும்போது,   

அழுவதா அல்லது சிரிப்பதா என்று எனக்குத் தெரியவில்லை. 

இருப்பினும், தோக் மாட்டின் ஆலோசனைக்கு நான் நன்றி கூறுகிறேன் என்று அவர் மேலும் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset