நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாரா விசாரணையில் நோயியல் நிபுணருக்கு மிரட்டல் விடுத்த சபா நபர் கைது

கோத்தா கினபாலு:

ஷாரா விசாரணையில் நோயியல் நிபுணருக்கு இணையத்தில் மிரட்டல் விடுத்த சபாவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.

சபா  மாநில போலிஸ் தலைவர் ஜௌதே டிகுன் இதனை கூறினார்.

ஷாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பான விசாரணையில் தடயவியல் நிபுணரின் வாக்குமூலங்கள் தொடர்பாக முகநூலில் ஆடவர் ஒருவர் மிரட்டியுள்ளார்.

இது தொடர்பில் அந்நிபுணர் போலிசில் புகார் செய்திருந்தார்.

இப்புகாரின் அடிப்படையில் சபா செம்பூர்னாவில் ஆடவர் ஒருவரை போலிசார் கைது செய்தனர்.

அமுங் கமருதீன் என்ற பெயரில் உள்ள ஒரு பேஸ்புக் கணக்கிற்கு எதிராக செப்டம்பர் 5ஆம் தேதி புகார் பதிவு செய்யப்பட்டது.

அதில் குற்றவியல் மிரட்டல், நெட்வொர்க் சேவைகளை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

61 வயதான சந்தேக நபர் நேற்று காலை 7 மணியளவில் செம்பூர்னா மாவட்ட காவல் தலைமையகத்தில் கைது செய்யப்பட்டார்.

அவரது கைத்தொலைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset