நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சாரா மூலம் பொருட்களை வாங்குவதற்கான அமைப்பு திருப்தி அளிக்கிறது: பிரதமர்

பாலிங்:

சாரா மூலம் பொருட்களை வாங்குவதற்கான அமைப்பு (சிஸ்டம்) திருப்தி அளிக்கிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

ரஹ்மா அடிப்படை பங்களிப்பு திட்டம் (சாரா) மூலம் பொருட்களை வாங்குவதற்கான அமைப்பு திருப்தியளிக்கிறது.

இது இப்போது கிராமப்புறங்களில் உள்ள சிறிய பல்பொருள் அங்காடிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த முயற்சி கிராமப்புற மக்கள் உட்பட வாடிக்கையாளர்களுக்கும் வசதியை வழங்குகிறது.

இந்த சாரா திட்டத்தை நான் முழுமையாக பார்க்கிறேன்.

முதலாவதாக, இது பெரிய பல்பொருள் அங்காடிகள் மட்டுமல்ல, சிறிய பல்பொருள் அங்காடிகள் கூட சிறப்பாக இயங்குகிறது.

இரண்டாவதாக, நாங்கள் இப்போது உள்ளூர் தயாரிப்புகளைச் சேர்ப்பதை ஊக்குவிக்கிறோம்.

இது பெரிய பல்பொருள் அங்காடிகள் பிரிவில் சேர்க்கப்படவில்லை. இப்போது உள்ளூர் தயாரிப்புகளுக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்.

இங்குள்ள பாலிங் மக்கள் பொருளாதார பல்பொருள் அங்காடியில் சாரா திட்டத்தின் செயல்படுத்தலை மதிப்பாய்வு செய்தபோது பிரதமர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset