நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதன்கிழமை காலை முதல் நிறுத்தப்பட்டிருந்த  காரில் ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்டது

சுங்கைப்பட்டாணி:

புதன்கிழமை காலை முதல் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

கோலா மூடா மாவட்ட போலிஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் இதனை தெரிவித்தார்.

நேற்று இங்குள்ள பந்தர் பெர்டானாவில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பெரோடுவா மைவி காரில் இருந்து துர்நாற்றம் வீசியது.

இதை தொடர்ந்து அக்காரில் இருந்து ஒரு ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் பொதுமக்களால் 51 வயதுடைய நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, பிற்பகல் 3.15 மணியளவில் கோலா மூடா மாவட்ட போலிஸ் தலைமையக கட்டுப்பாட்டு அறைக்கு சம்பவம் தொடர்பாக ஒரு அழைப்பு வந்தது.

அந்த நபர் உடல் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

அங்குள்ள சிசிடிவி கேமராவின் அடிப்படையில், கடந்த புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு கார் நிறுத்தப்பட்டிருந்து.

நேற்று அந்த நபர் அசைவில்லாமல் இருந்தார் என்றும் அருகில் சென்றபோது அங்கு  துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset