நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ் உள்ளடக்க கண்காணிப்பாளர்களை நியமிக்க தவறினால் டிக் டாக் தடை செய்யப்பட வேண்டும்: டத்தோ சிவக்குமார்

கோலாலம்பூர்:

தமிழ் உள்ளடக்க கண்காணிப்பாளர்களை நியமிக்க தவறினால் டிக் டாக்  தடை செய்யப்பட வேண்டும்.

இதற்கான அழுத்தத்தை அரசு கொடுக்க வேண்டும் என மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் கூறினார்.

சமீபத்தில் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் இணையப் பகடிவதைப் பிரச்சினையை, 

குறிப்பாக தமிழ் சமூகத்திற்கு எதிரானதை கையாளத் தவறியதற்காகவும், முன்னர் வாக்குறுதியளித்தபடி கூடுதல் கண்காணிப்பாளர்களை நியமிக்காததையும் அவர் கடுமையாக கண்டித்துள்ளார்.

மேலும் மறைந்த ஈஷா மீதான கொடுமைப்படுத்துதல் வழக்கு போன்ற சம்பவங்கள் உட்பட இந்தப் பிரச்சினையைத் தீர்க்க டிக் டாக் தவறியது சட்ட நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஈஷாவின் மரணத்தின் போது இதே பிரச்சினையை நான் முன்பு எழுப்பினேன்.

ஒருவரின் உயிரைப் பறித்த இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் செயற்கை நுண்ணறிவு புதுமையான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று நான் கண்டித்தேன்.

இருப்பினும் டிக் டாக் போன்ற சமூக ஊடக தள வழங்குநர்கள் மொழியை தானாக அங்கீகரிப்பது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியது விந்தையானது.

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில், மொழி சரிபார்ப்பு, ஆபாசமான மொழி, ஊடக தளத்தால் தானாகவே கண்டறியப்பட்டு, பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

இன்றைய காலகட்டத்தில் எதுவும் சாத்தியமற்றது அல்ல.

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ஆபாசமான, வன்முறையான மொழியைக் கண்டறிவதற்கான வழிகளை தள வழங்குநர்கள் அடையாளம் காண வேண்டும். 

இந்த நடவடிக்கையின் மூலம், பாதி பிரச்சனை தீர்க்கப்படும் என்று அவர் கூறினார்.

சமூகத்தில் இப்போது பேசப்படும் இணைய பகடிவத  உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்பதை அனைத்து தரப்பினரும் அறிந்திருக்க வேண்டும். 

வன்முறை, ஆபாசமான, முரட்டுத்தனமான  கருத்துக்களை இடுகையிடுவதன் விளைவாக எழும் பிரச்சினைகளை தடுக்க வேண்டும்.

இருந்தாலும் டிக் டாக் இன்னமும் விதிமுறைகளை பின்பற்றாமல் உள்ளது. ஆக அதற்கான அழுத்தத்தை அரசு டிக் டாக்கிற்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும்.

பல நாடுகளில்  டிக் டாக்கைப் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளன.

ஆம டிக் டாகை அதன் பயனர்கள் பயன்படுத்துவதைத் தடை செய்யும் நாடுகளில் மலேசியாவும் இருக்கக்கூடாது என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset