நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாரா கைரினா வழக்கின் நோயியல் நிபுணர் சாட்சி, நெட்டிசன்களிடமிருந்து மிரட்டல்கள் வந்ததாக போலிசில் புகார்

கோத்தா கினபாலு:

ஷாரா கைரினா வழக்கின் நோயியல் நிபுணர் சாட்சி, நெட்டிசன்களிடமிருந்து மிரட்டல்கள் வந்ததாக போலிசில் புகார் செய்துள்ளார்.

கோத்தா கினாபாலு மாவட்ட போலிஸ் தலைவர்  காசிம் முடா இதனை உறுதிப்படுத்தினார்.

மாணவி ஷாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணைகள் தற்போது நடந்து வருகிறது.

இந்த இரண்டு நாட்கள் விசாரணை நடவடிக்கைகளின் போது தனது சாட்சியத்தைத் தொடர்ந்து வந்ததாக நம்பப்படும் இணைய பயனர்களிடமிருந்து வந்த அச்சுறுத்தல்கள் குறித்து தடயவியல் நோயியல் நிபுணர் டாக்டர் ஜெஸ்ஸி ஹியு போலிஸ் புகார் அளித்துள்ளார்.

இந்த விஷயத்தை நான் உறுதிப்படுத்துகிறேன். இருப்பினும் அவர் மேலும் அது குறித்து இப்போது கருத்து தெரிவிக்க முடியாது.

நேற்று மாலை அவரிடமிருந்து எங்களுக்கு ஒரு புகார் கிடைத்தது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset