நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாரா வழக்கு விசாரணை முடியும் வரை மற்ற நபர்கள் மீது குற்றம் சாட்ட ஏஜிசிக்கு எந்த திட்டமும் இல்லை

கோத்தாபாரு:

ஷாரா வழக்கு விசாரணை முடியும் வரை மற்ற நபர்கள் மீது குற்றம் சாட்ட  ஏஜிசிக்கு எந்த திட்டமும் இல்லை.

சட்டத் துறை தலைவர் டான் ஸ்ரீ முஹம்மத் துசுகி மொக்தார் இதனை தெரிவித்தார்.

முதல் படிவ மாணவி  ஷாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பான  விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த விசாரணை நடவடிக்கைகள் முடியும் வரை, வேறு எந்த நபர்களையும் குற்றம் சாட்ட சட்டத்துறை தலைவர் அலுவலகம் விரும்பவில்லை.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஐந்து பெண் மாணவர்கள் மீது மட்டுமே குற்றம் சாட்டப்படும் என்று அவர் கூறினார்.

எனவே, விசாரணை நடவடிக்கைகள் முடியும் வரை எந்த சந்தேக நபரையும் குற்றம் சாட்டுவதற்கான எந்த திட்டமும் இதுவரை இல்லை. 

நடவடிக்கைகள் முடிந்ததும், நாங்கள் மதிப்பாய்வு செய்து விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset