
செய்திகள் மலேசியா
சுங்கை பூலோ மருத்துவமனையில் நடந்த மோதலை தடுக்க முயன்ற போலிஸ் அதிகாரியைத் தாக்கிய ஆடவர் கைது
சுங்கைபூலோ:
சுங்கை பூலோ மருத்துவமனையில் நடந்த மோதலை தடுக்க முயன்ற போலிஸ் அதிகாரியைத் தாக்கிய ஆடவர் கைது செய்யப்பட்டார்.
சுங்கை பூலோ மாவட்ட போலிஸ் தலைவர் முகமட் ஹபீஸ் முகமட் நோர் இதனை கூறினார்.
இன்று அதிகாலை சுங்கை பூலோ மருத்துவமனையில் இரு கும்பலுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலை கலைக்க முயன்றபோது ஒரு போலிஸ் அதிகாரியின் முகத்தில் காயம் ஏற்பட்டது.
சுங்கை பூலோ மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் நடந்த சண்டை குறித்து அதிகாலை 2.10 மணிக்கு போலிஸ் துறைக்கு அழைப்பு வந்தது.
உடனே போலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
ஆனால் மருத்துவமனை போலிஸ் நிலையத்தில் பணியில் இருந்த அதிகாரிகள் ரோந்து குழு வருவதற்கு முன்பே நிலைமையைக் கட்டுப்படுத்த சீக்கிரமாகவே சென்றுவிட்டனர்.
போலிஸ் ரோந்து குழு வந்தவுடன், அந்த அதிகாரியை 40 வயதுடைய உள்ளூர் நபர் ஒருவர் தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆரம்ப தகவல்களின்படி, போலிஸ் அதிகாரி ஆண்கள், பெண்கள் குழுவிற்கு இடையேயான சண்டையை தடுக்க முயன்றார்.
இருப்பினும், ஒரு நபர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டு போலிஸ் அதிகாரியைத் தாக்கினார்.
இதனால் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 6, 2025, 10:31 pm
சாரா மூலம் பொருட்களை வாங்குவதற்கான அமைப்பு திருப்தி அளிக்கிறது: பிரதமர்
September 6, 2025, 10:28 pm
எனது அரசியல் எதிர்காலம் கட்சியுடன் பிணைக்கப்படவில்லை: கைரி
September 6, 2025, 10:25 pm
ஷாரா கைரினா வழக்கின் நோயியல் நிபுணர் சாட்சி, நெட்டிசன்களிடமிருந்து மிரட்டல்கள் வந்ததாக போலிசில் புகார்
September 6, 2025, 7:20 pm
பெருவாஸ் தமிழ்ப்பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டம் விமரிசையாக நடந்தேறியது
September 6, 2025, 6:56 pm
புதன்கிழமை காலை முதல் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்டது
September 6, 2025, 6:38 pm
தமிழ் உள்ளடக்க கண்காணிப்பாளர்களை நியமிக்க தவறினால் டிக் டாக் தடை செய்யப்பட வேண்டும்: டத்தோ சிவக்குமார்
September 6, 2025, 4:00 pm
விசா முடிந்த பின் 90 நாட்கள் வரை மலேசியாவில் தங்கியிருக்கும் அந்நிய நாட்டினருக்கு அபராதம்: சைபுடின்
September 6, 2025, 3:42 pm
அதிருப்திகளை வெளிப்படுத்த தேசிய முன்னணி உச்ச மன்றத்தை மஇகா பயன்படுத்த வேண்டும்: முஹம்மத் ஹசான்
September 6, 2025, 3:28 pm