நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெருவாஸ் தமிழ்ப்பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டம் விமரிசையாக நடந்தேறியது

மஞ்சோங்: 

நாட்டின் 68 சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, பெருவாஸ் தமிழ்ப்பள்ளி சுதந்திர தினக் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இம்மாபெரும் கொண்டாட்டத்தை மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ ஸ்ரீ ஆர்.எஸ் தனேந்திரன் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

 இந்நிகழ்வில் மேலும், மஞ்சோங் மாவட்ட காவல் துறை அதிகாரி துவான் டி.எஸ்.பி சேகரன், ஈப்போ ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளர் முனைவர் சேகர் நாரயணன் கலந்து சிறப்பித்தனர். 

May be an image of 9 people and text

இப் பிரம்மாண்டமான நிகழ்வில் பெருவாஸ் நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள தேசியப் பள்ளிகள், சீனப்பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகளின் பங்கேற்பு இந்நிகழ்விற்கு முத்தாய்ப்பாய் அமைந்திருந்தது. இது போன்ற நிகழ்வில் அனைத்து பள்ளிகளின் பங்கேற்பு, தேசிய ஒற்றுமைக்கு இது ஒரு தொடக்கம் என இப்பள்ளியின் தலைமையாசிரியர்  குணசீலன் மனோகரன் தெரிவித்தார். 

எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மும்மூர்த்தி  தெரிவித்தார். இந்நிகழ்வில் மஞ்சோங் மாவட்ட தலைமையாசிரியர்கள், முன்னாள் தலைமையாசிரியர்கள், சுற்றுவட்டார தலைவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என சுமார் 150 பேர் கலந்து சிறப்பித்தனர்.

ஆர். பாலச்சந்தர்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset