நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விசா முடிந்த பின் 90 நாட்கள் வரை மலேசியாவில் தங்கியிருக்கும் அந்நிய நாட்டினருக்கு அபராதம்: சைபுடின்

கோலாலம்பூர்:

விசா முடிந்த பின் 90 நாட்கள் வரை மலேசியாவில் தங்கியிருக்கும் அந்நிய நாட்டினருக்கு அபராதம் விதிக்கப்படும்.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இதனை கூறினார்.

நாட்டில் விசாக்காலம் முடிந்த பின் 90 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் அந்நிய நாட்டினருக்கு குடிநுழைவு துறை அபராதங்களை விதிக்கும்.

இது வரும் அக்டோபர் முதல் அமலுக்கு வரும்.

சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் நோக்கில், விசாரணை தொடங்கி வழக்குகளை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இனி இருக்காது.

நாங்கள் அபராதம் விதிக்கும்போது, வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்படாது என்பது பொருள். 

முன்னர், கூடுதல் அபராத அறிவிப்புகள் அனைத்திற்கும் விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டு, நீதிமன்ற நடைமுறைகளுக்கு உட்படுத்த வேண்டியிருந்தது. 

இனி, குறிப்பாக 90 நாட்களுக்கு உட்பட்ட தங்குதவைகளுக்கு நேரடியாக அபராதம் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset