நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈப்போ மாநகரில் நபிகள் நாயகம் பிறந்த தின ஊர்வலம்: கோலாகலமாக நடைபெற்றது

ஈப்போ:

வரலாற்று சிறப்புமிக்க ஈப்போ இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் மௌலிதுர் ரசூல் தினத்தை முன்னிட்டு சிறப்புமிக்க ஒற்றுமை ஊர்வலம் இன்று நடைபெற்றது.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறந்த இந்த ரபியுல் அவ்வல் மாதம் பிறை ஒன்றில் இருந்து 13 வரையிலும் ஒவ்வொரு நாளும் இரவு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வரலாற்று சிறப்புகளை தொடராக பேசப்பட்டது. 

இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.

இதில் பேரா மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து மக்கள் கலந்து கொண்டார்கள். 

ஆண்கள் பெண்கள், இளைஞர்கள், சிறார்கள் என கிட்டத்தட்ட 600 பேர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

உலக மக்கள் எல்லோருக்காவும் வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது என்று ஈப்போ இந்திய முஸ்லிம் பள்ளிவாசல் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. 

அடுத்தாண்டு மேலும் சிறப்புடன் நடத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset