நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வீட்டின் கூரையில் கத்தியுடன் அமர்ந்திருந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று நம்பப்படுகிறது

காஜாங்:

வீட்டின் கூரையில் கத்தியுடன் அமர்ந்திருந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று நம்பப்படுகிறது.

காஜாங் மாவட்ட போலிஸ் தலைவர் நஸ்ரோன் அப்துல் யூசோஃப் இதனை தெரிவித்தார்.

நேற்று இங்குள்ள செமினியில் ஒரு வீட்டின் கூரையில் கத்தியுடன் அமர்ந்து, மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று நம்பப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இரவு 8.50 மணியளவில் பொதுமக்களிடமிருந்து காவல்துறைக்கு தகவல் கிடைத்ததது.

மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறை குழுவும் சம்பவ இடத்திற்கு சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

48 வயது நபரை சமாதானப்படுத்த கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் முயற்சித்த பிறகு, ஷார்ட்ஸ் மட்டுமே அணிந்திருந்த சந்தேக நபர் சம்பவ இடத்தில் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டார்.

மேலும் கத்தியும் கைப்பற்றப்பட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset