நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூரில் நடந்த சோதனை நடவடிக்கையில் 96 சட்டவிரோத அந்நிய நாட்டினர் கைது

ஜொகூர்பாரு:

ஜொகூரில் நடந்த சோதனை நடவடிக்கையில் 96 சட்டவிரோத அந்நிய நாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

ஜொகூர் மாநில குடிநுழைவுத் துறை இயக்குனர் முகமட் ருஸ்டி முகமட் தருஸ் இதனை தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி இஸ்கந்தர் புத்ரி, கூலாய் சுற்றி நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் 96 சட்டவிரோத அந்நிய நாட்டின கைது செய்யப்பட்டனர்.

சுல்தான் இஸ்கந்தர் கட்டிடத்தில் அமலாக்கப் பிரிவு நடவடிக்கை பிரிவு,  மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு முகமை அதிகாரிகள் குழு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

உளவுத்துறை, கண்காணிப்பு அடிப்படையில், கைது செய்யப்பட்டவர்கள் செல்லுபடியாகும் அனுமதிச் சீட்டு இல்லாமல் மலேசியாவில் வேலை செய்து வாழ்ந்து வருவதைக் கண்டறியப்பட்டது.

43 தனித்தனி வளாகங்களில் நடத்தப்பட்ட நடவடிக்கைகளில் மொத்தம் 199 உள்ளூர், வெளிநாட்டினர் சோதனை செய்யப்பட்டனர்.

மேலும் கைது செய்யப்பட்ட 96 பேரில் வங்காளதேசம் (38), இந்தோனேசிய (15), மியான்மர் (12), பாகிஸ்தானிய (6) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset