நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிங்கப்பூர்-மலேசியா சட்டவிரோத போக்குவரத்துச் சேவை: இதுவரை 100க்கும் அதிகமான வாகனங்கள் பிடிபட்டன

சிங்கப்பூர்:

சட்டவிரோதப் போக்குவரத்துச் சேவைகளை வழங்கிய சந்தேகத்தில் வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட 100க்கும் அதிகமான வாகனங்கள் இவ்வாண்டு (2025) பிடிபட்டுள்ளன.

இந்த வாகன சேவைகள் சிங்கப்பூர் - மலேசியா இடையே சட்டவிரோதமாக வழங்கப்பட்டதாய்ச் சந்தேகிக்கப்படுகிறது.

விசாரணை தொடர்வதால் அவற்றில் பல வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

சில வாகனங்கள் மலேசியச் சுற்றுலா நிறுவனங்களின் பெயரில் பதிவுசெய்யப்பட்டிருக்கலாம் என ஆணையம் சொன்னது.

சுமார் 400 மலேசியச் சுற்றுலா நிறுவனங்களுக்குச் சொந்தமான MPV வாகனங்களைச் சிங்கப்பூர் அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதாக The Star செய்தி நிறுவனம் சென்ற மாதம் (ஆகஸ்ட்) 24ஆம் தேதி குறிப்பிட்டிருந்தது.

அவை சட்டவிரோதமாகப் போக்குவரத்துச் சேவைகளை வழங்கியதற்காகப் பிடிபட்டதாய் அது சொன்னது.

அபராதம் செலுத்தியும்கூட அவை சில மாதங்களுக்குச் சிங்கப்பூரில் இருந்ததாகவும் அதனால் நிறுவனங்கள் நொடித்துப் போகும் நிலைக்குப் போனதாகவும் செய்தி அறிக்கை சொன்னது.

அது குறித்த CNAயின் கேள்விக்குப் பதிலளித்த ஆணையம், அபராதம் செலுத்தினால் வாகனங்கள் நிறுவனங்களிடம் திரும்பக் கொடுக்கப்படும் எனும் உத்தரவாதம் இல்லை என்றது.

ஆதாரம்: CNA

​​​​

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset