நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதிய சலுகைகளுடன் பெர்சத்து கட்சி தயாராக இருக்க வேண்டும்: சைபுடின்

கோலாலம்பூர்:

பெர்சத்து கட்சி புதிய சலுகைகளுடன் தயாராக இருக்க வேண்டும்.

அக்கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சைபுடின் அப்துல்லா இதனை வலியுறுத்தினார்.

புதிய தேசிய ஒருமித்த கருத்தை வெளிப்படுத்த அரசியல் மீட்டமைப்பில் தொடங்கி, பெர்சத்து மக்களுக்கு ஒரு புதிய சலுகையை வழங்க வேண்டும்.

புதிய கட்சியாக இருந்தாலும் பெர்சத்து துன் டாக்டர் மகாதிர் முகமது, டான்ஸ்ரீ மொஹைதின்  யாசின் ஆகிய இரண்டு பிரதமர்களை உருவாக்கியது.

மேலும் பெர்சத்துவின் சாதனைகளை மக்கள் அங்கீகரித்துள்ளனர்.

குறிப்பாக கோவிட்-19 இன் உலக அங்கீகார மேலாண்மையையும் அவர்கள் அங்கீகரித்துள்ளனர்.

13ஆவது மலேசியா திட்டம் மீதான விவாதத்திலும் பெர்சத்து பிரதிநிதிகள் சிறப்பாக செயல்பட்டனர்.

ஷாரா கைரினா மகாதீரின் மரண வழக்கில் நீதி கோரியும், அரசாங்க கொள்முதல் மசோதா  மீதான வாக்கெடுப்பை ஒரு நாள் ஒத்திவைக்கவும், நகர்ப்புற புதுப்பித்தல் மசோதா மீதான விவாதத்தை அடுத்த கூட்டத்திற்கு ஒத்திவைக்கவும் வலியுறுத்தினர்.

கடந்த கால வெற்றிகளுக்கான ஏக்கத்துடன் அல்லது பொதுமக்களின் கோப அலைகளை நம்பி பெர்சத்து வாழ முடியாது.

மாறாக பொதுமக்களால் விரும்பப்படுவதால் ஆதரிக்கப்படும் கட்சியாக மாற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset