நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசத்தைக் கட்டியெழுப்பும் சவால்களை எதிர்கொள்வதில் நபிகள் நாயகத்தை ஒரு முன்மாதிரியாக கொள்ளுங்கள்: பிரதமர்

கோலாலம்பூர்:

தேசத்தைக் கட்டியெழுப்பும் சவால்களை எதிர்கொள்வதில் நபிகள் நாயகத்தை ஒரு முன்மாதிரியாக கொள்ளுங்கள்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்கள், நபிவழியான சுன்னாவில் கவனம் செலுத்துவதன் மூலமும், நபிகள் நாயகத்தின் அறப்போராட்டத்தைப் பின்பற்ற வேண்டும்.

இதன் மூலம் ஒரு தேசத்தையும் அரசையும் கட்டியெழுப்பும் அறைகூவலை எதிர்கொள்ள வேண்டும்.

மதீனாவில் மாட்சிமை மிக்க நபிகள் நாயகத்தின் தலைமையின் மூலம், மனித கண்ணியம், நீதி, சட்டத்தின் கொள்கைகள், அறிவு, ஒழுக்கத்தின் மதிப்புகள், மார்க்க விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட மனிதாபிமான மதிப்புகள் போன்ற நவீனத்துவத்தின் அடித்தளங்களை நபிகள் நாயகம் அமைத்துள்ளார்.

மதீனாவில் நபிகள் நாயகம் அவர்களால் வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட சமூகம் என்ற பொருளில் சிவில் சமூகம் என்பது கைரா உம்மா ஆகும்.

இது ஒரு உயர்ந்த சமூகமாகும் என்று அவர் கூறினார்.

இந்த தேசம் நம்பிக்கை, நல்ல மதிப்புகள், உலகளாவிய மனிதகுலத்திற்கு நன்மைகளை வழங்குதல், மரூஃப் மதிப்புகளை நிலைநிறுத்துவதற்கும் தீய அறிகுறிகளை ஒழிப்பதற்கும் பொறுப்புடன் இருப்பது ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.

இன்று மௌலிதூர் ரசூலை முன்னிட்டு முகநூல் பதிவில் பிரதமர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset