நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா தேர்தலில் ஜிஆர்எஸ் கட்சியுடன் தேசிய முன்னணி ஒத்துழைக்காது: ஜாஹித்

கோத்தா கினபாலு:

சபா மாநில தேர்தலில் ஜிஆர்எஸ் கட்சியுடன் தேசிய முன்னணி ஒத்துழைக்காது.

தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை திட்டவட்டமாக அறிவித்தார்.

17ஆவது சபா மாநிலத் தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் ஜிஆர்எஸ் கட்சியுடம் இணைந்து செயல்படுவதில்லை என்ற தேசிய முன்னணி, சபா அம்னோவின் முடிவு இறுதியானது.

 அதற்கு பதிலாக, தேர்தலில் நம்பிக்கை கூட்டணியுடன் மட்டுமே இணைந்து செயல்பட கட்சி முடிவு செய்துள்ளது.

முந்தைய முத்தரப்பு விவாதங்களிலிருந்து அனைத்து உண்மைகளையும் விவரங்களையும் ஆராய்ந்த பிறகு, 

தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பைப் பேணுவது என்ற அம்னோ முடிவு செய்துள்ளது.

 இதனால் ஜிஆர்எஸ் கட்சியுடன் எந்த ஒத்துழைப்பும் இருக்காது என்று உறுதியாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

சபா அம்னோ அரசியல் பணியகக் கூட்டத்திற்குப் பிறகு  செய்தியாளர் கூட்டத்தில் துணைப் பிரதமருமான அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset