நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மௌலுதுர் ரசூல் கொண்டாட்டத்தில் ஒற்றுமைக்காக கண்ணீர் விட்டு பிரார்த்தனை செய்த பேராக் சுல்தான் 

ஈப்போ:

நேற்றிரவு இங்கு நடைபெற்ற மாநில அளவிலான மௌலுதுர் ரசூல் கொண்டாட்டத்தில் மக்களிடையே ஒற்றுமை, நல்லிணக்கத்திற்காக பிரார்த்தனை செய்தபோது பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா கண்ணீர் விட்டார்.

தனது உணர்ச்சிபூர்வமான பிரார்த்தனையில், இதயங்களை ஒன்றிணைக்கவும், உறவுகளை சரிசெய்யவும், அறியாமையின் இருளிலிருந்து மக்களைப் பாதுகாக்கவும் அல்லாஹ்விடம் உருக்கமாக பிரார்த்தித்தார் 

“இறைவா எங்களுக்கு நேரான பாதையைக் காட்டு. உனது வழிகாட்டுதலை எங்களுக்கு வழங்கு. வழிபிறழாமல் நாங்கள் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டிய நேர்வழியில் நடக்க செய். இறைநம்பிக்கையின் ஒளியால் எங்கள் ஆன்மாக்களை ஒளிரச் செய் எங்கள் இறைவா. எங்களை ஒன்றுபட்ட சமூகமாக, அன்பான, மரியாதைக்குரிய நன்மையில் ஒத்துழைக்கும் ஒருவராக ஆக்கிவிடு யா அல்லாஹ்.

“பிரிவு, விரோதம், வெறுப்பிலிருந்து எங்களை விலக்கி வை. உனக்காக எங்கள் இதயங்களை நம்பிக்கையுடனும் அன்புடனும் பிணைத்தருளும், யா அல்லாஹ். எங்கள் நாட்டு மக்களுக்கு அமைதியையும் சுபிட்சத்தையும் தா இறைவா” என்று அவர் கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்தார்.

பேராக் துவாங்கு ஜாரா சலீமின் ராஜா பெர்மைசூரி, பேராக் ராஜா ஜாபர் ராஜா மூடா மூசாவின் ராஜா மூடா, பேராக் மெந்திரி  பெசார் டத்தோஸ்ரீ சாரணி முஹம்மத், அவரது மனைவி டத்தின் செரி ஏசர் ஜூபின் ஆகியோரும் இந்த மௌலூதுரஸுல் பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset