நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திருநங்கை கொலை: லோரி ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு

ஈப்போ:

கடந்த வாரம் ஒருவரை வேண்டுமென்றே கொலை செய்ததாக லோரி ஓட்டுநர் ஒருவர் மீது இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

இருப்பினும் 32 வயதான எம்.ஐ. சரவணன் மீதான குற்றச்சாட்டு மாஜிஸ்திரேட் முஹம்மத் ஹரித் முஹம்மத் மஸ்லன் முன் வாசிக்கப்பட்ட பிறகும் எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

இந்தக் குற்றச்சாட்டின்படி, ஃபெண்டி என்ற பாதிக்கப்பட்டவரின் மரணத்திற்குக் காரணமாக இருந்து வேண்டுமென்றே கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் அவ்வாடவர் கடந்த ஆகஸ்ட் 27 அன்று இங்குள்ள ஜாலான் ஹார்லியில் உள்ள ஒரு ஹோட்டல் கட்டிடத்திற்கு அடுத்துள்ள சந்துப் பாதையில் இந்தச் செயலைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, அவர் மீது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றம் சாட்டப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 ஆண்டுகளுக்குக் குறையாத ஆனால் 40 ஆண்டுகளுக்கு மிகாத சிறைத்தண்டனை விதிக்கப்படும், மேலும் மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால், 12 பிரம்படிகளுக்குக் குறையாத தண்டனை விதிக்கப்படும்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset